கற்பிட்டி செடோ ஸ்ரீ லங்கா தலைமையகத்தில் இடம்பெற்ற கண்டல் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல்
(கற்பிட்டி செய்தியாளர் சி்யாஜ்)
கற்பிட்டி பிரதேசத்தின் சிறு கடலை அன்டிய பகுதிகளில் காணப்படும் கண்டல் தாவரங்கள் பல்வேறு நபர்கள் மற்றும் சில தேவைப்பாடுகள் நிமித்தம் அழிக்கப்படும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. இதனை தடுத்து நிறுத்துவது தொடர்பாக விஷேட செயற்த்திட்டம் உருவாக்கல் பற்றிய கலந்துரையாடல் செடோ ஸ்ரீ லங்கா தலைமையகத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் செடோ ஸ்ரீ லங்கா நிர்வாக பொறுப்பாளர் ஏ.ஆர்.எம் ஹாபிஸ் , செடோ ஸ்ரீ லங்கா ஊடக இணைப்பாளர் சனீர் சஜான், செடோ ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் நிருவன மேற்பார்வையாளர் எஸ்.எப் சுஜானா மற்றும் சமூக செயற்பாட்டாளர் சபுறுல்லாஹ் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments