குறிஞ்சிப்பிட்டி நூர் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை, புத்தக பைகள் வழங்கி வைப்பு
(கற்பிட்டி செய்தியாளர் சியாஜ்)
கற்பிட்டி. குறிஞ்சிப்பிட்டி இளைஞர்கள் மற்றும் நலன் விரும்பிகள் சிலரின் நன்கொடையாக குறிஞ்சிப்பிட்டி நூர் பாலர் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை மற்றும் புத்தக பைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு பாலர் பாடசாலையின் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது.
2025 ம் ஆண்டில் குறிஞ்சிப்பிட்டி நூர் பாலர் பாடசாலையில் புதிதாக இணைந்து கொண்ட சகல மாணவர்களுக்கும் குறிஞ்சிப்பிட்டி இளைஞர்கள் மற்றும் நலன் விரும்பிகள் சிலரின் நன்கொடைகளை கொண்டு மேற்படி சீருடை மற்றும் புத்தக பைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி இளைஞர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கு பாலர் பாடசாலை நிர்வாகம் சார்பாக தமது நன்றிகளை தெரிவிப்பதாகவும் ஆசிரியர் குறிப்பிட்டார்.
No comments