பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதுயுதீன் அவர்களின் தந்தை அல்ஹாஜ் பதுயுதீன் அவர்கள் காலமானார்
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)
பாராளுமன்ற உறுப்பினர் றிஷாத் தந்தை அல்ஹாஜ் பதுயுதீன் தனது 78 வது வயதில் திங்கட்கிழமை (17) இரவு காலமானார்.
மன்னார் உப்புக்குளத்தை பிறப்பிடமாக கொண்ட இவர் தற்போது புத்தளம் தில்லையடி அல் மினாபுரத்தில் வசித்து வருகிறார். இவர் காலம்சென்ற அப்துல் றஹ்மான் மரியம் பீவியின் மகனும் ஹாஜியானி ஹலீமத் ஸகிய்யா வின் கணவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதுயுதீன், றியாஜ், பாரிஷா பர்வின், பஸ்மிலா பர்வின் காலஞ்சென்ற பைறூஸா பர்வின் ஆகியோரின் தந்தையும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா செவ்வாய்க்கிழமை (18) அஸர் தொழுகையை அடுத்து புத்தளம் ரத்மல்யாய அல் காசிமீ மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments