Breaking News

"வெளிநாட்டு வாழ் புதுகுடியிருப்பு சமூகம்" அமைப்பின் உருவாக்கம்

புளிச்சாக்குளம், புதுக்குடியிருப்பு       என். எம். ஹபீல் (கபூரி,JP)

புத்தளம் மாவட்டம் புளிச்சாக்குளம் கிராம சேவகர் பிரிவின் புதுக்குடியிருப்பு கிராம வெளிநாட்டு வாழ் உறவுகளால் (PUTHUKKUDIYIRUPPU COMMUNITY IN ABROAD (PCA) "வெளிநாட்டு வாழ் புதுகுடியிருப்பு சமூகம்" எனும் பெயரில் புதிதாக ஒரு அமைப்பு கத்தார் நாட்டில் ஆரம்பிக்கப்பட்டது.


இதில் தலைவராக சகோதரர் வை. எம். பஸ்னி, செயளாலராக சகோதரர் ஜெ. எம். மபாஹிம், பொருளாளராக சகோதரர் எச். எம். இக்ராம், ஆலோசகர்களாக சகோதரர்களான பீ.எம். ரிம்ஸான், எம்.அய்.எம். அர்ஷாத் ஆகியோரும் ஊடக பிரிவுக்காக சகோதரர்களான எம்.எஸ்.எம். ரசீம், எம்.ஆர்.எம்.  ஸாகிர் ஆகியோரும் நிர்வாக குழுவாக தெரிவு செய்யப்பட்டனர்.


இவர்களில் முக்கிய கருப்பொருளாக உயர் தரம், சாதாரண தர மற்றும் தரம் 05 மாணவர்களின் பெறுபேற்றின் அடைவுமட்ட அபிவிருத்திற்காக கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தல், புதுக்குடியிருப்பு மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல் என ஆரம்ப குறிக்கோள் என தலைவர் தனது ஆரம்ப உரையில் தெளிவுபடுத்தியதோடு இவ்வமைப்பின் LOGO இலச்சினையும், சட்ட யாப்பும் அறிமுகப்படுத்தப்பட்டது.


மற்றும் ஒரே நிழலில் ஒன்றினைப்பதனூடாக சமூகம் மற்றும் பல்வேறு பரப்புக்களில் பங்களிப்பு செலுத்தவும், வெளிநாடுகளில் உள்ள புதுக்குடியிருப்பு உறவுகளுக்கு தொழில் வழிகாட்டல்களை வழங்கவும் ஆன்மீகம் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டல் பணிகளில்  ஈடுபடுத்திக்கொள்ளவும் "வெளிநாட்டு வாழ் புதுக்குடியிருப்பு சமூகம்" என்ற அமைப்பு ஒன்றை நிறுவுவது காலத்தின் தேவையாக கருதி குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.






No comments