குவைத் நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு உலர் உணவுப் பொதிகள் விநியோகம்
(எம். ஏ. ஏ. எம். காஸிம்)
குவைத் நாட்டின் 64 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு புத்தளம் மதுரங்குளி பிரதேசத்தில் நேற்று முன்தினம் (11.02.2025) காலை நிகழ்வு ஒன்று நடை பெற்றது.
குவைத் நாட்டின் பங்களிப்புடன் நடை பெற்று வரும் மதுரங்குளி மேர்ஸி லங்கா கல்வி நிறுவன வளாகத்தில் நேற்று முன்தினம் காலை 10.00 மணியளவில் மேர்ஸி லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் பௌசுல் ரஹ்மான் தலைமையில் நிகழ்வு நடை பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட செயலாளர் எம்.எம்.பீ. ஹேரத் பிரதேச செயலாளர் மதுரங்குளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்.
இதன் போது அதிதிகள் பேண்ட் வாத்தியங்களுடன் அழைத்து வரப்பட்டனர்.குவைத் நாட்டின் 47 ஆவது சுதந்திர தின கேக் வெட்டப்பட்டது.
அத்துடன் புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 335 குடும்பங்களுக்கு சுமார் 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகளும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Post Comment
No comments