Breaking News

கா.பொ.த. (சா.த) மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு.

அகில இலங்கை ஜம்இயதுல் உலமா புத்தளம் அக்கரறப் பற்றுக் கிளையின் முழுமையான ஏற்பாட்டில்  கா.பொ.த. (சா/த) மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு இன்று (16)  பு/அல்மின்ஹாஜ் மு.ம.வித்தியாலயத்தில் நடைபெற்றது.


இக்கருத்தரங்கில் அல் மின்ஹாஜ் மு.ம.வித்தியாலயம்,  பு/கனமூலை மு.ம.வித்தியாலயம், சமீரகம மு.வித்தியாலயம், மாணவர்களும்  கனமூலை பெண்கள் அறபுக்கல்லூரி மாணவிகளும் பங்குபற்றினர். இதன்போது கணிதம், இஸ்லாம் ஆகிய பாடங்களில் நன்கு அனுபவம் பெற்ற ஆசிரியர்கள் மூலம் விளக்கமளிக்கப்பட்டது.

 

இந்நிகழ்வை அகில இலங்கை ஜம்இயதுல் உலமா அக்கறைப்பற்று கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் எம். எம். எம். மிஹ்லார் (நளீமி) அவர்களும், உபதலைவர் அஷ்ஷெய்க் பஸ்லுல் பாரிஸ் (நளீமி) அவர்களும் செயலாளர் அஷ்ஷெய்க் முஜீபுர் ரஹ்மான் (மனாரி) அவர்களும் கலந்து கொண்டு கருத்தரங்கை ஆரம்பித்து வைத்தனர்.





1 comment: