Breaking News

புத்தளத்தில் பன்முக ஆளுமை ஒன்று இளைப்பாறுகின்றது.

எம்.யூ.எம்.எம்.சனூன்

புத்தளம் வெட்டாளை அஸன்குத்தூஸ் முஸ்லிம் வித்தியாலயத்தின் பிரதி அதிபராக நீண்ட காலம் சேவையாற்றிய எம்.எஸ்.எம். மொஹிதீனுக்கான பிரியாவிடை வைபவம் அண்மையில் (07) பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர்  ஏ.ஜே.எம்.இல்ஹாம் தலைமையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.


பாடசாலையில் கடமையாற்றிய பிரதி அதிபர் எம்.எஸ்.எம்.மொஹிதீன் அரச சேவையில் 36 வருடங்களை நிறைவு செய்து, அரச பணியிலிருந்து  ஓய்வு பெற்று பாடசாலையின் சேவை காலத்தை நிறைவு செய்துள்ளார் .


அவருக்கான இந்த பிரியாவிடை நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ. அஸ்கா அஜ்ஹர்  கலந்துகொண்டார்.


புத்தளம் பாத்திமா பாலிகா முஸ்லிம் வித்தியாலயத்தின்  அதிபர் ஏ.எல்.சரீனா பர்வின், புத்தளம்  நல்லாந்தலுவ முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் அதிபர் எம்.வை.ஹுதைபா, கணித பாட ஆசிரிய ஆலோசகரும் இப்பாடசாலையின்  வலய கல்விப் பணிமனையின் இணைப்பாளருமாகிய என். பிரதாபன், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் புத்தளம் மாவட்ட செயலாளர் ஆசிரியர்  கலாநிதி எஸ்.ஆர்.எம். ஆசாத், பாடசாலையின் முன்னாள் ஆசிரியர்கள் மற்றும் நிகழ்ச்சியின் கதாநாயகன் பிரதி அதிபர் மொஹிதீன் அவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வின் போது  "பன்முக ஆளுமை ஒன்று இளைப்பாறு கின்றது" என்ற நாமம் கொண்ட சஞ்சிகையொன்றும் வெளியிடப்பட்டது.


இதனை கல்லூரியின் பிரதி அதிபர் ஏ.ஜே.எம்.இனூஸ் நிகழ்வில் கலந்து சிறப்பித்த அதிதிகளுக்கு வழங்கி வைத்தார். ஆசிரியர் கே.எம். முகைமீன் சஞ்சிகை விமர்சனத்தை வழங்கினார்.


மாணவர்களின் கலை கலாச்சார நிகழ்ச்சிகளும் ஆசிரியர்களினால் மேற்கொள்ளப்பட்ட நிகழ்ச்சிகளும் இந்நிகழ்ச்சியை மேலும் மெருகூட்டியது. 


அதிபர் மற்றும் ஆசிரியர்களினால் பாடசாலை சார்பாக அன்பளிப்பு வழங்கப்பட்டதுடன் பாடசாலை மாணவர்களும் வகுப்பு ரீதியாகவும் அன்பளிப்புகளை வழங்கியதுடன் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.  


இதனைத் தொடர்ந்து பாடசாலை அபிவிருத்தி சங்கம், பழைய மாணவர் சங்கம், ஸஹீரியன்ஸ் 80 ஸ் அமைப்பு,  அத்தாரிக் ஜனாஸா சங்கம் என பல அமைப்பினரும் அன்பளிப்புகளை வழங்கி அவரை வாழ்த்தி கௌரவித்தனர். 


பாடசாலை வரலாற்றில் இவ்வாறான பாரிய கௌரவிப்பு நடைபெற்றது இதுவே முதல் தடவையாகும்.  இதனை திறம்பட நடத்தி முடிப்பதற்கு சகல வழிகளிலும் உதவிய அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பழைய மாணவர்களுக்கும் பாடசாலையின் சார்பாக அதிபர் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றார்.



















No comments