Breaking News

அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா புத்தளம் நகர கிளை புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் விஷேட பிரிவு மாணவர்களை கௌரவப்படுத்தியது.

எம்.யூ.எம்.சனூன்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையினால் புத்தளம் சாஹிரா ஆரம்ப பாடசாலையில் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான நிகழ்வுகள் அண்மையில் (05) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.


மாற்று திறனாளிகள் என்றுமே கௌரவிக்கப்பட வேண்டும், அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற மிகப் பெரிய நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


சாஹிரா ஆரம்ப பாடசாலையின் அதிபர் எஸ்.ஆர்.எம்.முஹ்சி  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜம்இயத்துல் உலமா புத்தளம் நகர கிளை தலைவர் அஷ்ஷெய்க் ஏ.பீ.எம். ஜிப்னாஸ் (அல் மிஸ்பாஹி) உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் பிள்ளைகள் மிக சந்தோஷத்துடன் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிக்காட்டினர். நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாற்றுத்  திறனாளி பிள்ளைகளுக்கும் ஜம்இயத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் சான்றிதழ்களும், இனிப்பு வகைகளும் வழங்கி வைக்கப்பட்டன.


இந்த மாணவர்களுக்கு பல தியாகங்களுக்கு மத்தியில் போதிக்கும் ஆசிரியைகளையும் ஜம்இயத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை கெளரவப்படுத்தி அவர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கியது.













No comments