Breaking News

கற்பிட்டி, பள்ளிவாசல்துறையில் இடம்பெற உள்ள கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் சிரமதான பணி

(கற்பிட்டி செய்தியாளர் சியாஜ்)

கற்பிட்டி பள்ளிவாசல்துறை தேசிய மக்கள் சக்தி குழுவின் ஏற்பாட்டில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக பள்ளிவாசல்துறை வெல்லங்கரையின் பிரதான வீதிகள் சிரமதானம் மூலம் சுத்தம் செய்யும் பாரிய வேலைத்திட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) முன்னெடுக்கப்பட உள்ளது.


இவ் வேலைத்திட்டம் பற்றிய விஷேட கலந்துரையாடல் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் தொகுதி அமைப்பாளர் நிமல் பத்திரண மற்றும் ஒருங்கிணைப்பாளர் நிசாந்த ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது. இதில் நலன் விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.







No comments