Breaking News

கற்பிட்டி றஹ்மானிய்யா அரபுக் கல்லூரியில் பட்டம் பெற்றவர்களுக்கான துஆ மஜ்லிஸ் வைபவம்

(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி றஹ்மானிய்யா அரபுக் கல்லூரியில் 2023 மற்றும் 2024 ம் வருடங்களில் தமது கல்வி ஆண்டினை பூர்த்தி செய்து உலமாக்களாக  பட்டம் பெற்ற 12 ஆலிம்களுக்கான துஆ மஜ்லிஸ் வைபவம் றஹ்மானிய்யா அரபுக் கல்லூரியில் அதன் அதிபர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம்  முபஸில்( உஸ்மானீ) தலைமையில் இடம்பெற்றது 


இவ் வைபவத்தின் பிரதம அதிதிகளாக றஹ்மானிய்யா அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் அல்ஹாஜ் எம்.ஐ.எம் இபாதத்துல்லாஹ் (றஹ்மானீ) மற்றும் கல்லூரியின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஜீ. ஹபீபுர் றஹ்மான் (றஹ்மானீ), கௌரவ அதிதியாக கொழும்பு  மதீனத்துல் இல்ம் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.எப் அப்துல் அஸீஸ்( ஹில்ரீ), விஷேட அதிகளாக றஹ்மானிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபர் அஷ்ஷெய்க் கே.எம்.எம். தம்சீர் ( றஹ்மானீ), கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர்களான அஷ்ஷெய்க் எம் இப்றாஹீம் ( றஹ்மானீ) மற்றும் அஷ்ஷெய்க் எம்.யூசூப்  ( காஸிமீ) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


அரசின் அஹதிய்யா மற்றும் தர்மாச்சாரியா பரீட்சைகள், கணனி கற்கை நெறிகள், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்குமான வகுப்புக்கள் இடம்பெறுவதுடன் பரீட்சைக்கும் மாணவர்கள் அமர்த்தப்படுகின்றமையும் விஷேட அம்சமாகும்.


கடந்த ஏழு வருட மார்க்க கல்வியை பூர்த்தி செய்து 2023 ம் கல்வி ஆண்டில் பட்டம் பெறும் உலமாக்கள் வரிசையில்

01) அநுராதபுரம் கம்பிரீகஸ்வெவ அல் ஹாபீல்  மௌலவி எம்.என் பரீட் அஹமட் (றஹ்மானீ), 

02) மதுரங்குளி அல் ஹாபீல் மௌலவி ஏ. மொஹமட் ( றஹ்மானீ ), 

03) கண்டக்குளி அல் ஹாபீல் மௌலவி எம்.எச் மொஹமட் அஸீம் (றஹ்மானீ),

04) பள்ளிவாசல்துறை அல் ஹாபீல் மௌலவி எச் மௌஹமட் றைஸ்தீன் ( றஹ்மானீ), 

05) மன்னார் மௌலவி ஏ.ஆர் அப்துல்லாஹ் (றஹ்மானீ) ஆகியோரும்


 2024 ம் கல்வி ஆண்டில் பட்டம் பெறும் உலமாக்கள் வரிசையில் 

01) அல் ஹாபீல் மௌலவி  எம்.எம் மொஹம்மட் பர்ஹான் ( றஹ்மானீ)

02) கற்பிட்டி அல் ஹாபீல் மௌலவி எம்.ஏ மௌஹமட் அஸ்ஜட் (றஹ்மானீ)

03) புத்தளம் அல் ஹாபீல் மௌலவி எம்.என்  மௌஹமட் நிஸ்லான் ( றஹ்மானீ )

04) கந்தளாய் மௌலவி எம். என் ஆகீப்  தாரீக் (றஹ்மானீ)

05)  கற்பிட்டி மௌலவி எம்.எஸ் சஜீட்  (றஹ்மானீ)

06) நரக்கள்ளி மௌலவி ஏ. மொஹமட் அர்ஷட் (றஹ்மானீ)

07) கற்பிட்டி மௌலவி எம்.ஆர் மொஹமட் நளீக் (றஹ்மானீ) ஆகியோரும் இணைந்து கொண்டனர்.










No comments