Breaking News

தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற சாதாரண தர மாணவர்களுக்கான இலவச கணிதப் பாட கருத்தரங்கு

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்,          புத்தளம் எம் யூ எம் சனூன்)

புத்தளம் தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எழுத உள்ள மாணவர்களுக்கான இலவச கணிதப் பாட கருத்தரங்கு ஒன்று தேசத்தின் குரல் (Voice of Nation) அமைப்பின் அனுசரனையில் பாடசாலையின் அதிபர் திருமதி பர்ஜானா தலைமையில் நடைபெற்றது .


ஆயிரம் மாணவர்களுக்கு இலவச கணிதக் கருத்தரங்கு என்னும் வேலைத்திட்டத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் ஊடாக இடம்பெற்ற இரண்டாவது கருத்தரங்கில் தேசத்தின் குரல் (Voice of Nation) அமைப்பின் பிரதித் தலைவர் ஹிஜாஸ் மரைக்கார், உயர்பீட உறுப்பினர்களும், ஆலோசகர்களுமான ஏ.ஏ தாரிக், ஏ.எம் அனீஸ் மற்றும் ஒபேட் (OPED) அமைப்பின் தலைவர் எம் டி.எம் நபீல் ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






No comments

note