கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு செரீனா ஸ்ட்டோர்ஸ் நிறுவனத்தினால் புத்தகப் பை அன்பளிப்பு!.
கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர்களுக்கு கொழும்பு செரீனா ஸ்ட்டோர்ஸ் (CERINA STORES) நிறுவனத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட புத்தகப் பை வழங்கும் நிகழ்வு இன்று (16) கல்லூரியின் CLC மண்டபத்தில் அதிபர் எம்.எச்.எம். தௌபீக் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க எம்.எச்.எம். அலிஅக்பர், மற்றும் எம்.நௌபி ஆகியோரின் முயற்சியினால் கொழும்பு செரீனா ஸ்ட்டோர்ஸ் நிறுவனத்தின் ஊடாக சுமார் ஆறு இலட்சம் (600,000/=) ரூபா பெறுமதியான 150 புத்தகப் பைகளை அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளரும், முந்தல் மதுரங்குளி பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைவருமான ஏ. எச். எம். ஹாரூன், பிரதி அதிபர் ஏ.ஏ. அஷ்ரப், ஆகியோருடன் ஆசிரியர்கள், ஏற்பாட்டாளர்களான எம்.எச்.எம். அலிஅக்பர், எம். நௌபி, மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வின் போது மாணர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
இப்புத்தகப் பை வருமைக் கோட்டின் கீழ் வாழும் தரம் 8, 9,10,11,12 ஆகிய வகுப்பு மாணவர்களுள் தெரிவு செய்யப்பட்ட 150 மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments