புத்தளம் இந்து கல்லூரியில் இடம்பெற்ற சாதாரண தர மாணவர்களுக்கான இலவச கணிதப் பாட கருத்தரங்கு
(கற்பிட்டி செய்தியாளர் சியாஜ், புத்தளம் நிருபர் சனூன்)
புத்தளம் இந்து மத்திய (தேசிய பாடசாலை) கல்லூரியில் இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எழுத உள்ள மாணவர்களுக்கான இலவச கணிதப் பாட கருத்தரங்கு தேசத்தின் குரல் அமைப்பின் அனுசரனையில் பாடசாலையின் அதிபர் திரு. பீ.ஆர் தம்பிதுறை தலைமையில் நடைபெற்றது .
ஆயிரம் மாணவர்களுக்கு இலவச கணிதக் கருத்தரங்கு என்னும் வேலைத்திட்டத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் ஊடாக இடம்பெற்ற மூன்றாவது கருத்தரங்கின் விரிவுரையை பாடசாலையின் கணித பாட ஆசிரியர் எம் டீ. எம் இம்ரான் ஹூசைன் மேற்கொண்டார்
இதில் தேசத்தின் குரல் அமைப்பின் தலைவர் எப்.எம் பாசீல் (பொறியியலாளர்) பிரதித் தலைவர் ஹிஜாஸ் மரைக்கார், உயர்பீட உறுப்பினர்களும், ஆலோசகர்களுமான ஏ.ஏ தாரிக், ஏ.எம் அனீஸ் மற்றும் ஒபேட் அமைப்பின் தலைவர் எம் டி.எம் நபீல் ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments