கத்தார் நாட்டில் இயங்கும் புத்தளம் லயன்ஸ் காற்பந்தாட்ட கழகத்தின் புதிய ஜேர்ஸி அறிமுகமும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும்.
எம்.யூ.எம்.சனூன்
கத்தார் நாட்டில் இயங்கும் புத்தளம் லயன்ஸ் காற்பந்தாட்ட கழகத்தினால் புதிய ஜேர்ஸி அறிமுக நிகழ்வும், சான்றிதழ்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் அண்மையில் (07) டோஹா கத்தார் அஸீஸியா கோப்பி கடை உணவக விடுதியில் நடைபெற்றது.
கடந்த சுமார் ஐந்து மாதங்களாக கத்தார் நாட்டில் நடைபெற்று முடிந்த கத்தார் ஸ்ரீ லங்கன் காற்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் திறமைகளை வெளிப்படுத்திய புத்தளம் லயன்ஸ் காற்பந்தாட்ட அணி வீரர்களுக்கு இதன்போது சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த லயன்ஸ் காற்பந்தாட்ட கழகமானது கத்தார் வாழ் புத்தளம் இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு களம் அமைத்து கொடுப்பதிலும், சமூக தொண்டாற்றுவதிலும் முக்கிய பங்காற்றி வருகின்றது.
லயன்ஸ் காற்பந்தாட்ட கழகத்தின் ஸ்தாபகரும், பயிற்றுவிப்பாளருமான எஸ்.எம். ஹக்கீம் மற்றும் முகாமையாளர் எம்.ஹம்மூத் ஆகியோர் வழிகாட்டல் மற்றும் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக கத்தார் ஸ்ரீ லங்கன் சமூக நலன்புரி சம்மேளனத்தின் ஸ்தாபகர் முஹம்மது அக்ரம், இந்தியா த்ரீ ரோஸஸ் அமைப்பின் சார்பாக முஹம்மது அன்வர், கத்தார் ஸ்ரீ லங்கா முஸ்லிம் சம்மேளன பொருளாளர் முஹம்மது மஜாஸ், கத்தார் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பின் தலைவர் முஹம்மது ஷராப், கத்தார் புத்தளம் சாஹிரா காற்பந்தாட்ட கழக தலைவர் ஏ.டபில்யூ.எம்.அன்ஷாத், கத்தார் இலங்கை காற்பந்தாட்ட சம்மேளன தலைவர் முஹம்மது பர்ஹான் உள்ளிட்ட பல சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் லயன்ஸ் கழகத்தினரால் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
No comments