கற்பிட்டி மஹ்தி பவுண்டேஷன் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
(கற்பிட்டி செய்தியாளர் சியாஜ் - றிஸ்வி ஹூசைன்)
கற்பிட்டி தில்லையூர் கிராமத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு கற்பிட்டி மஹ்தி பவுண்டேஷன் ஏற்பாட்டில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (08) தில்லையூர் மீனவ சஙக கூட்ட மண்டபத்தில் தில்லையூர் மீனவ சங்கத் தலைவர் சபுறுல்லாஹ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில்மஹ்தி பவுண்டேஷன் நிறைவேற்று பணிப்பாளர் ஏ.ஆர்.எம் முஸம்மில், தில்லையூர் பள்ளிவாசல் பேஷ் இமாம் றிப்கான் ( றஹ்மானி), பள்ளிவாசல் தலைவர் அன்வர்தீன், சுகாதார வைத்திய உத்தியோகத்தர் றஸ்மி ஆகியோர் கலந்து கொண்டனர் .
கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் மஹ்தி பவுண்டேஷன் வேலைத்திட்டத்தின் மூன்றாவது நிகழ்வாக இது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments