Breaking News

கற்பிட்டி தில்லையூர் பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வு

(கற்பிட்டி செய்தியாளர் சியாஜ்)

கற்பிட்டி தில்லையூர் அரசினர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தில் இடம்பெற்று வரும் இல்ல விளையாட்டு போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வுகள் எதிர்வரும் புதன்கிழமை (19) பிற்பகல் 02 மணிக்கு பாடசாலையின் அதிபர் எஸ் எம் அரூஸ் தலைமையில் தில்லையூர் ஹமாஸா விளையாட்டு மைதானத்தில்  இடம்பெற உள்ளது.


இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ எம் ஜவாத் கலந்து சிறப்பிக்க உள்ளதுடன் இல்ல விளையாட்டுப் போட்டிகளுக்காக பாடசாலை மாணவர்கள் அல் பலாஹ் மற்றும் அல் பதாஹ் ஆகிய இரண்டு இல்லங்களாக பிரிக்கப்பட்டு போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருவதுடன் அல் பலாஹ் இல்லத் தலைவராக ஏ.எப்.எம் ஆதீக் என்ற மாணவனும் இவர்களை வெற்றி பாதை நோக்கி வழிப் படுத்தும் பொறுப்பாசிரியராக எம். ஜே. எம் ஜெஸ்லின் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அத்தோடு அல் பதாஹ்  இல்லத் தலைவராக எம்.ஐ.எம் ஹப்ஸான் என்ற மாணவனும் இவர்களை வெற்றி பாதை நோக்கி வழிப் படுத்தும் பொறுப்பாசிரியராக ஏ.எஸ்.எம் நபீஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .


மேலும் இறுதி நாள் நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் முகமாக கற்பிட்டி தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் தொகுப்பாளர்களால் தொகுத்து வழங்கப் பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




No comments