Breaking News

கற்பிட்டி தில்லையூர் பாடசாலையின் பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகிகள் தெரிவும்

(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)

கற்பிட்டி தில்லையூர் முஸ்லிம் கனிஷ்ட வித்தியாலயத்தில் இடம்பெற்ற பழைய மாணவர் சங்கத்தின் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகிகள் தெரிவும் வெள்ளிக்கிழமை (14) பாடசாலையின் அதிபர் எஸ் எம் அருஸ் தலைமையில் பாடசாலையில் இடம்பெற்றது.


பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாகவும் அதற்கான ஏற்பாடுகள் மற்றும் பழைய மாணவர்களின் பங்களிப்பு என்பன தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப் பட்டதுடன் புதிய நிர்வாகிகள் தெரிவும் இடம்பெற்றது.


அதன்படி தலைவராக பாடசாலையின் அதிபர் எஸ் எம் அருஸ் ( சுற்று நிருபத்தின்படி பதவி வழியாக)

செயலாளராக  மௌலவி எம்.டீ றிப்கான் ( றஹ்மானீ)

பொருளாளராக எம்.சீ.எம் அஸ்வர்

உறுப்பினர்களாக bஎம்.ஐ அன்வர்தீன், எம்.எஸ்.எம் றிஸ்வான், ஐ.எம் றிஸ்மி, எம்.என்.எம் ரௌஸான், எம்.ஐ.எம் அஜ்வாத், ஜே.எம் ரஜீஸ், எப்.எம் சப்லான், எம்.ஐ.எம் அஸ்கர், ஆர்.எம் ஹஸ்மத், எம்.என்.எம் மின்ஹாஜ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






No comments