ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற கருத்தரங்கு
(க.மகாதேவன்)
எதிர் வரும் மார்ச் (2025) மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வரலாறு பாடக் கருத்தரங்கு ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் சனிக்கிழமை (15) இடம்பெற்றது.
இதில் குசலை தமிழ் வித்தியாலயம், கருங்காலிச்சோலை தமிழ் வித்தியாலயம், முந்தல் தமிழ் வித்தியாலயம், உடப்பு தமிழ் மகா வித்தியாலயம், ஆண்டிமுனை தமிழ் மகா வித்தியாலயம் உள்ளிட்ட 130 மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
ரீப்பிரஷ் மெட்ரோ கெம்பஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் வளவாளராக வரலாறு பாட ஆசிரிய ஆலோசகர் ஜனாப்.எம்.சி.எம். நபீல் கலந்து கொண்டு நடத்தினார்.
No comments