பைசல் எம்.பியின் வாகனம் வென்னப்புவயில் விபத்துக்குள்ளானது மோட்டார் சைக்கிள் சென்றவர் பலி
(கற்பிட்டி செய்தியாளர் சியாஜ்)
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் பயணித்த வாகனம் வென்னப்புவ எனும் இடத்தில் வெள்ளிக்கிழமை (14) அதிகாலை மோட்டார் சைக்கிளுடன் மோதுன்டு விபத்துக்குள்ளனதில் மோட்டார் சைக்கிள் பயணித்த ஒருவர் ஸ்தலத்தில் பலியனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் பாராளுமன்றத்தை நோக்கி பயணிக்கும் போதே வென்னப்புவ எனும் இடத்தில் மேற்படி விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் இதன்போது பைசல் எம்.பிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் வாகனத்தை ஓட்டிச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் பைசலின் சகோதரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments