Breaking News

கண்காட்சி காற்பந்தாட்ட போட்டியில் இ.போ.சபை அணி வெற்றி.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் லெஜன்ட்ஸ் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சீ. கழகத்திற்கும், இலங்கை போக்குவரத்து சபையின் அணிக்குமிடையிலான சிநேகபூர்வமான கண்காட்சி காற்பந்தாட்ட போட்டி புத்தளம் மாவட்ட விளையாட்டு அரங்கில் வெள்ளிக்கிழமை (07) மாலை இடம்பெற்றது.


போட்டியின் முதல் பாதியில் இ.போ.ச. அணியினர் 02 கோல்களையும் வை.எஸ்.எஸ்.சீ. அணி 01 கோலினையும் பெற்றது.


இரண்டாவது பாதி ஆட்டமும்  முடிவடையும் போது இ.போ.ச. மொத்தமாக 03 கோல்களையும் வை.எஸ்.எஸ்.சீ. 01 கோலினையும் பெற்று இ.போ.ச.அணி வெற்றி வாகை சூடியது. 


இந்த போட்டியில் வெற்றி பெற்ற இ.போ.ச. அணியின் சந்தன சிறந்த வீரராகவும், அதே அணியை சேர்ந்த சுரங்க சிறந்த கோல் காப்பாளராகவும் தெரிவு செய்யப்பட்டார்கள். 


போட்டியில் விளையாடிய இரண்டு அணிகளுக்கும் பெறுமதியான வெற்றிக் கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.


லெஜன்ட்ஸ் கழகத்தின் ஸ்தாபக தலைவர் முஹம்மது யமீனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக புத்தளம் காற்பந்தாட்ட லீக்கின் தலைவர் எம்.எஸ்.எம்.ரபீக், காற்பந்தாட்ட லீக்கின் முன்னாள் செயலாளர் ஜே.எம்.ஜௌஸி, கற்பிட்டி பேர்ள்ஸ் கழகத்தின் தலைவர் முஹம்மது தாரிக் ஆகியோரோடு லெஜன்ட்ஸ் கழகத்தின் அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.














No comments