உடப்பு - ஆண்டிமுனை ஆலயத்தில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வு
(க.மகாதேவன்-உடப்பு)
உடப்பு ஆண்டிமுனைப் பகுதியில் அமைந்துள்ள ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தைமாதப் பொங்கல் (31) வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.
அத்துடன் பொங்கலுக்கு முன்னர் கன்னிப் பெண் ஒருவரினால் “மரு”சுமந்து வருதல் (கும்பம்) என்ற ஒரு நிகழ்வு இடம்பெறுவது காணக்கூடியதாக இருக்கும். உடப்பு கிராமத்தில் சம்பிரதாயமாக ஆலயப் பொங்கல்கள் வருடந் தோரும் இடம்பெறும்.
இந்நிகழ்வில் பெருந்தொகையான பெண்கள் கலந்து கொண்டு பாற்சோறு பொங்கி வழிபடுவது ஓர் மரபாகும்.
No comments