Breaking News

சர்வதேசப் பாடசாலைகளின் தரங்கள் குறித்து அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியினால் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

பெப்ரவரி  01. 2025 ஆம் திகதி நடைபெற்ற விசேடக் கூட்டத்தில் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகள் சம்பந்தமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் போசகருமான  இம்தியாஸ் பாகிர் மாகார் அவருடைய தலைமையில் முஸ்லிம் லீக் வாலிப முன்னணியினால் விசேடக் கூட்டத்தில் ஆராயப்பட்டது. இதில் கல்விமான்கள், சட்டத்தரணிகள் மற்றும் சமூக நலன்விரும்பிகளும் கலந்து கொண்டனர்.


சர்வதேச பாடசாலைகளின் தோற்றம் அதிகரித்து வந்துள்ளது. ஆனால் அவற்றின் தரம் குறித்து எந்த அமைப்புக்களோ, நிறுவனங்களோ ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை. இதன்காரணமாக அதிகமான சர்வதேசப்பாடசாலைகள் தரம் குறைந்தே காணப்படுகின்றது. அதுபோல் தகுதி குறைவான ஆசிரியர்கள், வளப்பற்றாக்குறை, நெருக்கீடு, பாதுகாப்பின்மை வழுவற்ற கட்டிடங்கள், கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் குறைபாடு, பயிற்சிகள் குறைபாடு, ஒழுக்க குறைபாடு போன்ற பல விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது.


வெகு விரைவில் ஒரு குழு அமைக்கப்பட்டு இது சம்பந்தமான ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கல்வி அமைச்சின் ஆலோசனையோடு சரியான பொறிமுறையொன்றினை உருவாக்குவதே எமது நோக்கம் என அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர்த திரு. ஷாம் நவாஸ் அவர்கள் தெரிவித்தார்கள்.


இத்திட்டத்துடன் இணைய ஆர்வமுள்ளவர்கள்  பின்வரும் தொலைபேசி இலக்கத்திட்க்கோ அல்லது மின்னஞ்சல் முகவரிக்கோ தொடர்பினை மேற்கொள்ளவும்  0777359678 அல்லது acumlyf@gmail.com




No comments