மாதம்பை அல்-மிஸ்பாவின் 2025ம் ஆண்டுக்கான கால்கோள் விழா.
எம்.யூ.எம். சனூன்
2025-01-30ம் திகதி புதிய கல்வியாண்டினை முன்னிட்டு தரம் 01 மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான நிகழ்ச்சியானது மாதம் பை அல்-மிஸ்பாவின அதிபர் எஸ்.எல்.அன்வர் தலைமையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இனிதே நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக சிலாபம் கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஜீ.சுபாஷினி பெரேரா, மாதம்பை ஜும்ஆ பள்ளி நிர்வாக சபைத் தலைவர் எம்.எம்.எப்.அரபாத் ஆகியோரின் பங்குபற்றலுடன் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
No comments