புத்தளம் எம் பியின் கார் சாரதியான அவரின் சகோதரருக்கு 17 ம் திகதி வரை விளக்கமறியல்
(கற்பிட்டி செய்தியாளர் எம் எச் எம் சியாஜ்)
கார் விபத்து தொடர்பாக தேசிய மக்கள் கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஜே.எம் பைசலின் சகோதரரை பொலிசார் வெள்ளிக்கிழமை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து அவரை எதிர்வரும் 17 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாரவில பதில் நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த கார், வீதியை விட்டு விலகி, எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதுடன் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் விபத்தில் உயிரிழந்த நிலையில் விபத்து நடந்த நேரத்தில் வாகனத்தின் சாரதியாக இருந்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரரை கொஸ்வத்த பொலிஸார் கைது செய்யதமை குறிப்பிடத்தக்கது.
No comments