Breaking News

புத்தளம் IFM முன்பள்ளிக்கு 2025 ம் ஆண்டுக்கான புதிய மாணவர் அனுமதி.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

புத்தளம் மூன்றாம் குறுக்குத் தெரு மௌலாமகாம் மர்க்கஸ் பள்ளிவாசல் வளாகத்தில் இயங்கி வருகின்ற புத்தளம் நகரின் தமிழ் மொழி மூலமான முதலாவது முன்பள்ளியான  IFM முன்பள்ளிக்கு 2025 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.


2025 ஜனவரி மாதம் 3 வயது அல்லது 4 வயது பூர்த்தியான பிள்ளைகள் இந்த முன்பள்ளிக்கு சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.


இதற்கான விண்ணப்பங்களை வார நாட்களில் காலை 08 மணியிலிருந்து 11 வரைக்கும் பாடசாலை மண்டபத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என அதன் பொறுப்பாசிரியை திருமதி ரூசி சனூன் தெரிவித்துள்ளார்.


மாதாந்த கட்டணத்தை தவிர வேறு எந்த விதமான முன் கட்டணங்களும் (Advance) அறவிடாத முன்பள்ளியாக IFM முன்பள்ளி கருதப்படுகிறது.


புத்தளம் IFM முன்பள்ளி பல அரசியல் பிரபலங்களை, உலமாக்களை, புத்தி ஜீவிகளை மற்றும் சமூகவியலாளர்களை உருவாக்கிய பெருமையோடு 2025 ஜனவரியில் தனது 53 வது வயதில் கால் பதிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.




No comments

note