Breaking News

புத்தளத்தில் இருவர் உத்தியோகபூர்வ தொழில் வழிகாட்டல் ஆலோசகர்களாக கெளரவிக்கப்பட்டனர்.

எம்.யூ.எம்.சனூன்,  எம்.எச்.எம்.சியாஜ்

புத்தளம் நகரைச் சேர்ந்த இருவர் தொழில் வழிகாட்டல் ஆலோசகர்களாக உத்தியோகபூர்வமாக சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


கல்வி அமைச்சின் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக புத்தளம் பிரதேச செயலகம் மற்றும் கல்பிட்டி பிரதேச செயலகத்தில் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக பணிபுரியும் முஹம்மது பர்ராஜ் மற்றும் முஹம்மது அஸ்லம் ஆகியோர் வியாழக்கிழமை (30) காலை தொழில் வழிகாட்டல் ஆலோசகர்களாக உத்தியோகபூர்வமாக சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 


இவர்கள் இருவரும் மும்மொழி தேர்ச்சி பெற்ற தொழில் வழிகாட்டல் ஆலோசகர்களாக செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






No comments

note