புத்தளம் - உடப்பில் இடம்பெற்ற கலை விழா
(க.மகாதேவன்)
உடப்பில் அமைந்துள்ள வெண்ணிலா பாலர் பாடசாலை ஒன்றியம் ஏற்பாடு செய்த யாவரும் விரும்பும் “கலைவிழா” உடப்பு இந்து கலாசார மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (3) மாலை இடம்பெற்றது.
இதில் உடப்பு, ஆண்டிமுனை, செல்வபுரம் பகுதியிலுள்ள பாலர் பாடசாலைகளின் மாணவர்களின் பேண்ட் வாத்தியம் சகிதம் அதிதிகள் வரவேற்கப்பட்டதுடன், கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. சர்வமதத் தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் நிகழ்ச்சிகள் யாவும் ஆரம்பிக்கப்பட்டது.
இதில் நிகழ்ச்சியில் பங்குபற்றிய மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழும் வழங்கப்பட்டது. நிகழ்வில் ஆசிரியர்கள், அதிபர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள்,பெற்றோர்கள், சங்க உறுப்பினர்கள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.
No comments