கற்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்ற புதிய மாணவர் வரவேற்பு நிகழ்வு
(கற்பிட்டி நிருபர் சியாஜ், புத்தளம் நிருபர் சனூன்)
கற்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையின் 2025 ஆண்டிற்கான புதிய மாணவர்கள் வரவேற்பு நிகழ்வு புதன்கிழமை (22) பாலர் பாடசாலையின் தலைமை ஆசிரியர் அரூஸியா தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்வின் அதிதிகளாக கற்பிட்டி பிரதேச சபையின் வடமேல் மாகாண பாலர் பாடசாலை பொறுப்பதிகாரி திருமதி ரூபீகா மற்றும் கற்பிட்டி பிரதேச செயலக பாலர் பாடசாலைகளுக்கான பொறுப்பதிகாரி எச். எம்.நிப்ராஸ், கற்பிட்டி பாலர் பாடசாலை சங்கத்தின் பொருளாளர் விஜிதா ஆகியோருடன் அந்நூர் பாலர் பாடசாலையின் தலைவர் எஸ்.ஏ.எம் நியாஸ்தீன், செயலாளர் எம். நாசர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அந்நூர் பாலர் பாடசாலையின் புதிய மாணவர்கள் இறுதி ஆண்டில் பாலர் பாடசாலையிலிருந்து வெளியேறிய மாணவர்களால் பேண்ட் வாத்தியங்கள் சகிதம் அழைத்து வரப்பட்டடமை குறிப்பிடத்தக்கது.
No comments