சமீரகம அல் இர்பானிய்யா பாலர் பாடசாலை மாணவர்களின் கலை ஆளுமை, பிரியாவிடை மற்றும் புதியவர்கள் வரவேற்பு நிகழ்வு!.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)
மதுரங்குளி, சமீரகம அல் இர்பானிய்யா பாலர் பாடசாலை சிறார்களின் கலை ஆற்றல் ஆளுமைகள் வெளிப்பாடும், பிரியாவிடை மற்றும் புதிய ஆண்டிற்கான மாணவர்கள் வரவேற்பு நிகழ்வு சனிக்கிழமை (04) பு/சமீரகம முஸ்லிம் வித்தியாலய மைதானத்தில் பாலர் பாடசாலை ஆசிரியர்களான றிஸ்னா மற்றும் அனிஷா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பு/சமீரகம முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம். மிஹ்ழார் (நளீமி) கலந்து கொண்டதுடன், ஏனைய அதிதிகளாக சமீரகம பள்ளிவாசல் தலைவர் எம்.இப்திகார் பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி இர்பான் மற்றும் சமீரகம பாடசாலையின் ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சிறார்கள் தமது கலைத் திறமைகள் ஆற்றல்கள் மற்றும் ஆளுமைகள் என்பவற்றை வெளிப்படுத்தினர்.
இதேவேளை குறிப்பிட்டு கூறும் வகையில் கையடக்க தொலைபேசிகள் இன்றைய சிறார்களின் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் மற்றும் கையடக்க தொலைபேசிகள் இல்லாத அன்றைய காலங்களில் சிறார்களின் மத்தியில் காணப்பட்ட மனித நேய பண்புகள் என்பவற்றின் வேறுபாடுகளை எடுத்தியம்பும் நாடகம் அனைவரினதும் பாராட்டுக்களை பெற்றதுடன் அதற்கான தயார் படுத்தள்களையும் முழு நிகழ்வின் ஏற்பாடுகளையும் பெற்றோர்களின் பங்களிப்புடன் ஆசிரியர்களான ஆர்.றிஸ்னா மற்றும் எஸ் அனிஷா ஆகியோர் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments