அந் நூர் பாலர் பாடசாலை மாணவர்கள் விடுகை நிகழ்வும், கௌரவிப்பும் !
மாளிகைக்காடு செய்தியாளர்
மாவடிப்பள்ளி அந் நூர் பாலர் பாடசாலையின் இவ்வாண்டுக்கான மாணவர்கள் விடுகை நிகழ்வும் விளையாட்டு போட்டியும் மாவடிப்பள்ளி அஸ்ரப் மகா வித்தியாலயத்தில் மாவடிப்பள்ளி அந் நூர் பாலர் பாடசாலையின் தலைவர் எம்.எம். லியாக்கத்துல்லாஹ்வின் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
17 வது வருடமாக நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பார்ட்னர்ஸ் போ சேன்ஜ் இன்டெர்னஷனல் நிறுவன சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் றிசாத் ஷெரீப் கலந்து கொண்டார். மேலும் விசேட அதிதிகளாக மாவடிப்பள்ளி கமு/கமு/ அஸ்ரப் மகா வித்தியாலய அதிபர் ஏ.எல். ரஜாப்தீன், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு முன்னாள் உறுப்பினரும், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் தவிசாளருமான யூ.எல்.என். ஹுதா உமர், மாவடிப்பள்ளி ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் வை.ஏ. மனாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாலர் பாடசாலை மாணவர்களின் விளையாட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன், அவர்களுக்கான கௌரவிப்பும் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்களுக்கு மாணவர்களின் பெற்றோர்களால் கௌரவம் வழங்கப்பட்டதுடன் மாவடிப்பள்ளி அல்- மதீனா பாலர் பாடசாலை மற்றும் மாவடிப்பள்ளி ரஹ்மானியா பாலர் பாடசாலை ஆகியவற்றின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments