Breaking News

அமெரிக்க மக்களின் மனோநிலையினை புரியாமல் நாங்கள் பரிதாபப்படுகிறோம்.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல் பிரதேசத்தில் தீ பரவல் காரணமாக ஏற்பட்ட அழிவுகளை பார்த்து எங்களில் சிலர் அனுதாபப்படுவதனை காணக்கூடியதாக உள்ளது. அமெரிக்க மக்களை புரிந்து கொள்ளாததன் வெளிப்பாடுதான் இதற்கு காரணமாகும். 


அமெரிக்காவில் ஒவ்வொரு ஜனாதிபதியும் தங்களது இரண்டாவது பருவகால வெற்றிக்காக அமெரிக்க மக்களை கவரும்பொருட்டு உலகின் எந்த மூலையிலாவது படையெடுப்பு நடாத்துதல் அல்லது விமானத் தாக்குதல் நடாத்தி அதன்பின்பு வெற்றிச் செய்தியுடன் சென்று இரண்டாவது தடவையாக தேர்தலில் வெற்றி பெறுவது கடந்தகால அமெரிக்க அரசியலாகும். 


இதிலிருந்து உலகை அச்சுருத்துவதனையும், படையெடுப்பு நடத்துவதனையும், அப்பாவி மக்கள் மீது குண்டு போட்டு கொலை செய்வதனையும் அமெரிக்க மக்கள் ரசிக்கின்றார்கள் என்பதுதான் இதன் அர்த்தமாகும்.


தனது முதலாவது பருவகாலத்தில் ரொனால்ட் ட்ரம்ப் உலகில் அழிவுகளை ஏற்படுத்தி குண்டுகளை வீசாததன் காரனமாகவே இரண்டாவது தடவையாக அவர் தோல்வியடைந்தார். 


அதேநேரம் கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது காசாவை நரகமாக்குவேன் மற்றும் உலகில் எங்கெங்கெல்லாம் படையெடுப்பேன், அழிப்பேன் என்ற பட்டியலை வெளியிட்டதன் காரணமாகவே இந்த தேர்தலில் ட்ரம்ப் வெற்றிபெற்றார்.


பலஸ்தீனில் சமாதானத்தை ஏற்படுத்துவேன், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதனை நிறுத்துவேன் என்று கடந்த தேர்தலில் பிரச்சாரம் செய்த கமலா ஹாரிஸ் தோல்வியடைந்தார்.   


அத்துடன் உலகை அச்சுறுத்துவதன் மூலமும், படையெடுப்பு நடாத்தி அழிவுகளை ஏற்படுத்தி அங்குள்ள வளங்களை கொள்ளையடித்து அதனால் பணக்காரனாக செல்வச் செழிப்புடன் அமெரிக்க மக்கள் வாழ்கின்றனர். 


அமெரிக்கா உலகில் செய்துவருகின்ற அனைத்து அட்டூழியங்களையும், குற்றச் செயல்களையும் அமெரிக்க மக்கள் தடுத்து நிறுத்தவில்லை. மாறாக சூரையாடப்பட்ட வளங்களை அனுபவிக்கின்ற அவர்களும் பங்குதாரர்கள். 


அத்துடன் நாங்கள் எப்போதும் உலகின் முதன்மையானவர்கள் அதாவது “நம்பர் வன்” என்ற இறுமாப்பு ஒவ்வொரு அமெரிக்கர்களிடமும் உள்ளது. 


எனவேதான் அமெரிக்க அரசின் செயற்பாடுகள் வேறு என்றும், அப்பாவி மக்கள் வேறு என்றும், பிரித்துப் பார்ப்பது எமது தவறான பார்வையாகும்.  


முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




No comments

note