உடப்பு - ஆண்டிமுனை பாலர் பாடசாலையில் இடம்பெற்ற நன்றி நவிழல் நிகழ்வு
(க.மகாதேவன்)
உடப்பு ஆண்டிமுனையில் அமைந்துள்ள ஆதவன் பாலர் பாடசாலையின் நன்றி நவிழல் வைபவம் புதன்கிழமை (22) நடைபெற்றது.
2025ஆம் வருடத்துக்கான இம்மாணவர்கள் முதலாம் தரத்தில் அருகிலுள்ள ஶ்ரீ கிருஷ்ணா பாடசாலைக்கு செல்லும் நிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் அதன் ஆசிரியர்கள் திருமதி: கிருஷ்ணகாந்தி, திருமதி:ஜனனி ஆகியோரின் ஏற்பாட்டில் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், உடப்பு ஆண்டிமுனை மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதேவேளை இந்த நிகழ்வில் ஐரோப்பிய நாட்டு (uk) அன்பர்கள் பொருளாதார உதவிகளையும், ஒத்துழைப்புகளையும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments