Breaking News

புத்தளம் காஸிமியா முன்னாள் அதிபர் மறைவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பைசல் விடுத்துள்ள அனுதாபச் செய்தி

புத்தளத்தின் மூத்த உலமாவும் காசிமியா அரபுக்கல்லூரியின் முன்னாள் அதிபருமான அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களுடைய மரணச்செய்தி மிகவும் வருத்தமளிப்பதாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மத் பைசல் தெரிவித்துள்ளார்.


இன்று வபாத்தான அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களுடைய மரணம் தொடர்பில் வழங்கிய அனுதாபச் செய்தியிலேயே பாராளுமன்ற உறுப்பினர் பைசல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


புத்தளம் மாவட்டத்தின் சமூக சமய விவகாரங்களில் நேரம் காலம் பாராது மிகவும் அர்ப்பணிப்போடு செயல்பட்ட ஒரு சிறந்த ஆளுமையை புத்தளம் சமூகம் இழந்திருக்கிறது. அன்னாரது வீட்டில் பெரும்பாலும் சமூக சமய விவகாரங்கள் தொடர்பான ஆலோசனைகள் எப்போதும் இடம்பெற்றுக் கொண்டே இருக்கும். 


அன்னாரது இழப்பால் துயரூரும் அவர்களது மனைவி பிள்ளைகள் மற்றும் குடும்பத்தாருக்கு வல்லவன் ரஹ்மான்  அழகிய பொறுமையை வழங்க வேண்டும் எனப் பிராத்திப்பதோடு,  அன்னாரது அனைத்து நற்காரியங்களையும் பொருந்திக் கொண்டு அன்னாருக்கு உயரிய ஜன்னத்துல் பிர்தௌஸில் இடம் வழங்க வேண்டும் எனப் பிரார்த்திப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் தனது அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.




No comments

note