எது வீரம் ? எது வெற்றி ? நவீன இயந்திரங்களும், இஸ்லாமிய சாம்ராஜ்ய வீழ்ச்சியும்.
கட்டிடங்களை இடித்து அப்பாவி பொதுமக்களை கொத்துக் கொத்தாக கொலை செய்துவிட்டு பயங்கரவாதிகளை அழித்துள்ளதாக தமது ஊடகங்களில் பொய்ப் பிரச்சாரம் செய்வது வீரமல்ல. மாறாக போர் களத்தில் நேருக்கு நேராக போராளிகளுடன் போரிட்டு எதிரிகளை களத்தில் தோற்கடிப்பதுதான் உண்மையான வெற்றியும், வீரமுமாகும்.
இஸ்லாமிய கிலாபத்து ஆட்சி முறை பல நூற்றாண்டு காலமாக உலகில் எவராலும் அசைக்க முடியாத சக்தியாக இருந்தது. இரண்டாவது ஹலீபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் உலகையே ஆட்சி செய்த ரோம, பாரசீக சாம்ராஜ்யங்கள் தகர்த்தெறியப்பட்டது வரலாறாகும்.
பல காலகட்டங்களில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைநகர் இடம் மாறினாலும், அதனை உலகில் எந்த சக்தியாலும் வீழ்த்த முடியவில்லை. இறுதியாக துருக்கியை தலைநகராகக் கொண்ட ஓட்டோமான் சாம்ராஜ்யம் இருந்தது.
உலகில் அரபிகளும், இறைவன் மீது உறுதியான நம்பிக்கை உள்ளவர்களும் உடல்ரீதியாகவும், மனதளவிலும் எப்போதும் பலசாலிகள். நவீன ஆயுதங்களும், தொழில்நுட்பங்களும் கண்டுபிடிப்பதற்கு முன்பு நேருக்கு நேராக சண்டை செய்கின்ற மரபு போர்முறை மூலம் அவர்களை தோற்கடிக்க முடியவில்லை. அதனாலேயே இஸ்லாமிய கிலாபத் பல நூற்றாண்டுகளாக அசைக்க முடியாத சக்தியாக விழங்கியது.
நவீன ஆயுதங்கள் கண்டுபிடிப்புக்கு பின்பு போர்க்களத்தில் உடல் பலத்துக்கு பிரதான தேவை இருக்கவில்லை. நவீன ஆயுதங்கள் என்னும் இயந்திரங்களே போர்க்களத்தின் வெற்றியை தீர்மானிக்க ஆரம்பித்தது. அதன்பின்புதான் ஓட்டோமான் இஸ்லாமிய சாம்ராஜ்யம் சரிந்தது.
தற்போது பாலஸ்தீனில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக போரிடுகின்ற போராளிகள் உடல்ரீதியாகவும், மனதளவிலும் பலமானவர்கள். இவர்களுடன் மரபுரீதியாக மட்டுமல்ல, நவீன ஆயுதங்களைக்கொண்டும் போரிடும் ஆற்றல் யூதர்களிடம் இல்லை என்பது புலனாகின்றது.
அதி உச்ச நவீன ஆயுதங்களையும், தொழில்நுட்பங்களையும் முழுமையாக பயன்படுத்தியும், போராளிகளின் இலக்குகள் பற்றிய தகவல்களை பெறுவதற்காக பணத்தை வாரி இறைத்தபோதும் காசாவில் உள்ள போராளிகளை இஸ்ரேலினால் தோற்கடிக்க முடியவில்லை.
நவீன விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி அப்பாவி பொது மக்களை கொலை செய்து, கட்டிடங்களை தரைமட்டமாக்கியதற்கு பெயர் வீரமுமல்ல, வெற்றியுமல்ல. அது கோழைத்தனமும், தோல்வியுமாகும் என்பது காசாவில் தெரிகிறது. இதனை உலகம் இன்று புரிந்துகொண்டது.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
No comments