புத்தளம் ஜம்மியத்துல் உலமா கிளைக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் பைசல்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
புத்தளம் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா நகரக் கிளை உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல் ஜம்மியத்துல் உலமாவின் புத்தளம் காரியாலயத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் பைசலுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடியதுடன் ஜம்மிய்யாவின் உறுப்பினர்கள் புத்தளம் மாவட்டம் தொடர்பான சில விடயங்களையும் முன்வைத்தனர்
* புத்தளத்துக்கான நிரந்தர காதி நீதிபதியின் தேவைப்பாடு
* தள வைத்தியசாலையின்
மேம்பாடு. அத்தோடு வைத்தியசாலையில் காணப்படும் நாய்களை அகற்றுதல் தொடர்பாகவும்
* திறந்த பல்கலைக்கழகத்தின் புதிய கட்டிடத்தின் தேவைப்பாடு.
* புதிய தொழினுட்ப கல்லூரியின் தேவைப்பாடு.
* சீரான வடிகான் அமைப்பின் தேவைப்பாடு பற்றியும் கலந்துரையாடப்பட்டது
அத்தோடு ஜம்மிய்யாவின் உறுப்பினர்களால் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஜே எம் பைசல் பொன்னாடைப் போர்த்தியும் நினைவு சின்னம் வழங்கியும் கெளரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது .
No comments