புத்தளம் நகரில் வெற்றிகரமாக நடைபெற்ற இரத்த தான முகாம்.
எம்.யூ.எம்.சனூன், எம்.எச்.எம்.சியாஜ்
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளை, புத்தளம் பெரிய பள்ளி, புத்தளம் ஐக்கிய வர்த்தக நலன்புரி சங்கம், நஹ்தா அமைப்பு, புத்தளம் நகர சபை, புத்தளம் தள வைத்திய சாலை மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் இரத்த தான நிகழ்வு புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள தாய் சேய் நிலையத்தில் சனிக்கிழமை (04) இடம்பெற்றன.
இந்நிகழ்வில் 150 நபர்கள் இரத்த தானம் வழங்க வருகை தந்திருந்தனர். அதில் 103 நபர்களிடமிருந்து மாத்திரமே இரத்தம் பெறப்பட்டது.
குறிப்பாக உலமாக்கள் மற்றும் புத்தளம் காஸிமிய்யா மத்ரஸா மாணவர்களும் இரத்தம் வழங்கினர்.
இரத்தம் கொடுப்பவர்களை கெளரவிக்கும் முகமாக நினைவுச்சின்னமும் அன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு புத்தளம் மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல் அவர்களும் சர்வமத குழுவவினரும் வருகை தந்திருந்தனர்.
No comments