Breaking News

உடப்பு தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற கால் கோள் விழா!

 (க.மகாதேவன்-உடப்பு)

தரம் ஒன்று புதிய மாணவர்களை (2025) சேர்ப்பதற்கான “கால் கோள் விழா” (30) திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற போது, புத்தளம் தெற்கு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட உடப்பு தமிழ் மகா வித்தியாலயத்திலும் இந்த நிகழ்வு அதிபர் திரு.பூ.சுகந்தன் தலைமையில் இடம்பெற்றது.


இதில் பிரதம அதிதிகளாக இந்து ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.க.சின்னராசா, ஓய்வு பெற்ற அதிபர் திரு.யோகநாதன், மற்றும் தொழிலதிபர் திரு.தர்ஷன், ஓம் சக்தி பாலர் பாடசாலை ஆசிரியை திருமதி.கிருஷ்ணதேவி கணேசன், தெற்கு பாலர் பாடசாலை ஆசிரியை திருமதி.ஜெயா பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர். 


இதேவேளை புதிய மாணவர்களை பூச்செண்டு கொடுத்து இரண்டாம் தர மாணவர்கள் இதன் போது  வரவேற்றனர்.












No comments

note