தேசத்தின் குரல் அமைப்பின் அனுசரணையில் சாதாரண தர மாணவர்களுக்கான இலவச கணிதப் பாட கருத்தரங்கு
(கற்பிட்டி நிருபர் சியாஜ், புத்தளம் நிருபர் சனூன்)
புத்தளம் வேப்பமடு முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எழுத உள்ள மாணவர்களுக்கான இலவச கணிதப் பாட கருத்தரங்கு ஒன்று தேசத்தின் குரல் (Voice of Nation) அமைப்பின் அனுசரனையில் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம்.ஐ சர்மிள் தலைமையில் நடைபெற்றது .
ஆயிரம் மாணவர்களுக்கு இலவச கணிதக் கருத்தரங்கு என்னும் வேலைத்திட்டத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் ஊடாக இடம்பெற்ற முதலாவது கருத்தரங்கில் தேசத்தின் குரல் (Voice of Nation) அமைப்பின் உயர்பீட உறுப்பினர்களும், ஆலோசகர்களுமான ஏ.ஏ தாரிக், ஏ.எல் ஹமாசி, ஏ.எம் அனீஸ் மற்றும் ஒபேட் (OPED) அமைப்பின் தலைவர் எம் டி.எம் நபீல் ஆசிரியர் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments