கற்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையின் புதிய மாணவர் வரவேற்பு விழா புதன்கிழமை
(கற்பிட்டி நிருபர் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)
கற்பிட்டி அந்நூர் பாலர் பாடசாலையின் 2025 ஆண்டிற்கான புதிய மாணவர்கள் வரவேற்பு விழா புதன்கிழமை (22) காலை 09 மணிக்கு பாலர் பாடசாலையின் ஆசிரியர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்நிகழ்வின் அதிதிகளாக கற்பிட்டி பிரதேச சபையின் வடமேல் மாகாண பாலர் பாடசாலை பொறுப்பதிகாரி திருமதி ரூபீகா மற்றும் கற்பிட்டி பிரதேச செயலக பாலர் பாடசாலைகளுக்கான பொறுப்பதிகாரி எம்.நிப்ராஸ் ஆகியோருடன் அந்நூர் இளைஞர் கழகத்தின் தலைவர் நியாஸ்தீன், செயலாளர் நாசர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து சிறப்பிக்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments