அ. இ. ஜ. உலமா புத்தளம் மாவட்ட முன்னாள் தலைவர் மறைவுக்கு அ.இ.ஜ. உலமா புத்தளம் அக்கரைப்பற்று கிளைத் தலைவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தி
நாம் முன் மாதிரி மிக்க ஒரு ஆளுமையை இழந்து விட்டோம்!!!
இன்னாலில்லாஹு வஇன்னா இலைஹு ராஜ்ஊன்
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா புத்தளம் மாவட்ட முன்னாள் தலைவரும், காசிமியா அரபுக்கல்லூரி முன்னாள் அதிபருமாகிய, மதிப்பிற்கும் மரியாதைக்கும் அன்புக்கும் உரிய அஷ்ஷேய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் 13.01.2025 மாலை வபாத் ஆன செய்தி எம்மை கவலையும் அதிர்ச்சியும் அடையச் செய்தது.
மர்ஹூம் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் ஹழ்ரத் அவர்கள், பல இனங்கள், மதங்கள், சமயங்கள் சமூகங்கள், அமைப்புகள், இயக்கங்களைச் சேர்ந்த மக்கள் வாழும் புத்தளம் மாவட்டத்தில் சுமார் மூன்று தசாப்தங்களுக்கு மேல் பல சமய, சமூக, நிறுவனங்களில் பல முக்கிய பொறுப்புக்களை வகுத்துள்ளார்கள். நிதானம், தூர நோக்கு, புரிதல், விடயதானங்களில் ஆழம், சத்தியத்தில் உறுதி, பல்வேறு பட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகளில் வேறுபட்ட கருத்துக்களை உள்வாங்கி நடுநிலையான, சுமூகமான, காத்திரமான தீர்மானங்களை எடுக்கும் ஆற்றல் கொண்ட, மனித நேயமும், விருந்தோம்பலுமிக்க ஓரு முன்மாதிரி ஆளுமை.
அன்னாரது மறைவு நம் தேசத்துக்கும் குறிப்பாக புத்தளம் வாழ் சமூகத்துக்கும் ஓரு பேரிழப்பாகும்.
கருணையுள்ள அல்லாஹ் அன்னாரின் அனைத்து நற்செயல்களையும் பொருந்திக்கொள்வானாக. மனிதன் என்ற வகையில் அவர் மூலம் ஏதும் தவறுகள்,பாவங்கள் ஏற்பட்டிருப்பின் அவற்றை மன்னித்து அவரது மண்ணறை வாழ்வை பிரகாசிக்கச் செய்வானாக! ஜன்னத்துல் பிர்தௌஸை பரிசாக பெறும் பாக்கியத்தை வழங்குவானாக!
அவரின் இழப்பால் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு பொறுமையையும், மன ஆறுதலையும் வழங்குவானாக..!
اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله و وسع مدخله واغسله بالماء والثلج والبرد ونقه من الخطايا كما ينقى الثوب الأبيض من الدنس و أبدله دارا خيرا من داره واهلا خيرا من اهله و زوجا خيرا من زوجه ادخله الجنة و
اعذه من عذاب القبر و عذاب النار...!
அஷ்ஷேய்க் எம். எம். எம். மிஹ்ழார் (நழீமி)
தலைவர்-
அகல இலங்கை ஜம்இய்யதுல் உலமா
(புத்தளம் அக்கரைப்பற்று (மதுரங்குளி) கிளை.
No comments