தெனியாயவில் திறக்கப்பட்ட பெருந்தோட்டத் துறை மக்கள் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்புச் செயலகம்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்
பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பின் மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புச் செயலகம் தெனியாயவில் சனிக்கிழமை (04) திறந்து வைக்கப்பட்டது.
பெருந்தோட்டத் துறை மக்கள் குரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் அன்டனி ஜேசுதாஸன் தலைமையில் நடைப்பெற்ற ஒருங்கிணைப்பு செயலகத் திறப்பு விழாவில் மதத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், பாடசாலை அதிபர்கள், அரச அதிகாரிகள், அங்கத்தவர்கள், அமைப்பின் திட்ட பணிப்பாளர் லவீனா ஹசன்தி, தேசிய திட்ட இணைப்பாளர் பிரான்சிஸ் ராஜன், கள முகாமையாளர் என்டன் வனத்தையா உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
அமைப்பின் மாவட்டக் குழு உறுப்பினர்களும், "சிகரம்" மாவட்ட மலையக பெண்கள் சம்மேளன உறுப்பினர்களும் இணைந்து ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments