Breaking News

மதுரங்குளி ஸ்ரீமாபுரம் பத்தாம் கட்டையில் தாக்குதல், சம்பவ இடத்திற்கு விரைந்த பாராளுமன்ற உறுப்பினர் பைஸல்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)

மதுரங்குளி   ஸ்ரீமாபுரம் பத்தாம் கட்டை எனும் கிராமத்தில் வீடு ஒன்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று செவ்வாய்க்கிழமை (07) இரவு இடம்பெற்றுள்ளது


இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது  மது போதையில் வந்த குழுவினர் வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியையும் சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதன்போது எட்டு வயது சிறுமி ஒருவர் காயமடைந்த நிலையில் புத்தளம் தள வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.


இச்சம்பவம் பற்றி கேள்வியுற்ற புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஜே. எம். பைஸல் சம்பவ இடத்திற்கு உடன் விஜயம் செய்து தாக்குதல் சம்பவம் பற்றி கேட்டறிந்துடன் உடனடியாக மதுரங்குளி பொலிசாருடன் தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டு தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்ற குழுவினரை கைது செய்யுமாறு வேண்டிக் கொண்டதுடன் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும்  பணிப்புரை விடுத்தார்.


மேலும் இக்குழுவினர் இதற்கு முன்பும் இக்கிராம மக்களை இவ்வாறு தாக்கியும், அச்சுறுத்தியும் வந்துள்ளதாக  பாராளுமன்ற உறுப்பினரிடம் மக்கள் முறையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.













No comments

note