Breaking News

வடமேல் மாகாண ஆளுனர் டீ.கே.வர்ணசூரிய அவர்களுடன் புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தினர் சந்திப்பு.

புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்

வடமேல் மாகாண ஆளுனர் டீ.கே.வர்ணசூரிய அவர்களுடன் புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரி சங்கத்தினர் விஷேட சந்திப்பு ஒன்றினை புத்தளம் கச்சேரியில் சனிக்கிழமை (04) மாலை நடாத்தினர்.


இதன்போது வடமேல் மாகாண காணி ஆணையாளர் ஆர்.எம்.என்.பிரேமசிரி, புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.ஹேரத், புத்தளம் பிரதேச செயலாளர் எஸ்.பீ.வீரசேகர மற்றும் காணி திணைக்கள அதிகாரிகள் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். 


புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன் புரிச்சங்கத்தின் தலைவரும், புத்தளம் நகர சபை முன்னாள் உறுப்பினருமான பீ.எம்.ரனீஸ் மற்றும் அதன் உப தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட அங்கத்தவர்கள் பலரும் இதில் பங்கேற்றனர். 


ஆளுனர் இதன்போது மன்னார் வீதி கிழக்கரை காணி விவகாரம் தொடர்பாக பல விடயங்களை உப்பு சங்க  தலைவரிடம் கேட்டறிந்து கொண்டார். 


இந்த நாட்டின் உப்பு தேவையில் 40 வீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை நல்கி வரும், சுமார் 420 அங்கத்தவர்களைக் கொண்டிருக்கும் பாரம்பரியமாக இயங்கிவரும் ஒரு சங்கத்தின் பொறுப்பில் உள்ள காணிகளை தனியார் ஒருவருக்கு வழங்குவதற்கு எடுக்கப்பட்ட முடிவு மக்களின் அபிலாஷைகளுக்கு பாதகமானது என்பதை வலியுறுத்திய ஆளுனர், இவ்விடயத்தை காணி அமைச்சர் லால் காந்த அவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று சரியான தீர்வைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தார். 


தற்போது உப்பு இறக்குமதி செய்வதற்கான நிலைமை ஏற்பட்டிருக்கும் காரணத்தையும் உப்பு சங்க தலைவர் பீ.எம்.ரனீஸ்  இக்கூட்டத்தில் விரிவாக விளக்கினார்.









No comments

note