Breaking News

புத்தளம் உடப்பில் இடம்பெற்ற இலவச வைத்திய முகாம்

(க.மகாதேவன்)

வடமேல் மாகாண ஆயுள் வேத திணைக்களத்தின் உதவி வைத்திய ஆணையாளர் திரு.கே.சிவதரன் தலைமையில் உடப்பு இந்து கலாசார மண்டபத்தில் (21) திகதி மருத்துவ முகாம் ஒன்று இடம்பெற்றது.


இதில் தொற்றா நோய்களுக்கான பரிசோதணைகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்குரியமருந்துகளும் விநியோகிக்கப் பட்டன. 


குறிப்பாக நீரழிவு நோய், இரத்த அழுத்தம் பரிசோதணைகள் மேற்கொள்ளப்பட்டு, இடம்பெற்ற இந்த நிகழ்வில் நோயாளிகள் பலர் கலந்து கொண்டனர். 


இந்த மருத்துவ முகாமில் வைத்தியர்களான எச்.எம்.ஏ.எச்.மெனிக்கே, கே.எஸ்.ஆர்.பெரேரா, எஸ்.டி.சி. சாமரிக்கா ஆகியார் கலந்து கொண்டனர்.








No comments

note