Breaking News

மதவாக்குளம் முஸ்லிம் பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரு மாடிக்கட்டிடம் திறந்து வைப்பு

(கற்பிட்டி நிருபர் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)

மதவாக்குளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கபட்ட இரு மாடிக்கட்டிடம்  உத்தியோகபூர்வமாக மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (28) வித்தியாலயத்தின் அதிபர் என்.எல்.நஜீம்  தலைமையில் இடம்பெற்றது.


இந் நிகழ்வின் விஷேட அதிதியாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சருமான திரு. எ.எச்.எம்.எச்.அபயரத்னவும் சிறப்பு அதிதிகளாக புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு. எ.எச்.எம். அர்ஜுன,  பள்ளம கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு அஸங்க பிரதீப் குமார் கலந்து கொண்டார்கள்.


அத்தோடு மதவாக்குளம் கிராம சேவகர், மதவாக்குளம் ஜும்ஆப்பள்ளி நிர்வாக சபை உறுப்பினர்கள், மதவாக்குளம் கிளை ஜம்இய்யத்துல் உலமா சபை உறுப்பினர்கள், முன்னால் அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயற்குழு உறுப்பினர்கள், பெற்றார்கள், மாணவர்கள், பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், மதவாக்குளம் வர்த்தகர் சங்கம், "Helping Hands" அமைப்பு, "ESDA" போன்ற அனைவரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.









No comments

note