அதிபரால் தாக்கப்பட்ட தரம் இரண்டு மாணவன் வைத்தியசாலையில் அனுமதி
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம் யூ எம் சனூன்)
கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் புதன்கிழமை (29) பாடசாலைக்கு தாமதமாக வந்தார் என்ற காரணத்தை மையமாக வைத்து அதிபர் குறித்த மாணவனின் வகுப்பறைக்கு சென்று தடியினால் அடித்ததாகவும் இதன் காரணமாக குளித்த மாணவன் இரவு முழுவதும் சிரமப்பட்டதாகவும் அத்தோடு வியாழக்கிழமை (30) பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது விடயமாக மாணவனின் பெற்றோர் வியாழக்கிழமை (30) கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் அதிபருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளதுடன் குறித்த மாணவன் சிகிச்சைக்காக கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இது பற்றிய மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments