Breaking News

"மனித நேயப் பார்வையில் பலஸ்தீனப் படுகொலைகள்" எனும் கருப்பொருள் தாங்கிய சிறுகதைப்போட்டிக்கான பரிசளிப்பு விழா.

எம்.யூ.எம்.சனூன், எம்.எச்.எம்.சியாஜ்

புத்தளம் CREATE இலக்கிய வட்டத்தினால் அண்மையில் தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட, "மனித நேயப் பார்வையில் பலஸ்தீனப் படுகொலைகள்" எனும் கருப்பொருள் தாங்கிய சிறுகதைப்போட்டிக்கான பரிசளிப்பு விழா சனிக்கிழமை (04) வெகு விமர்சையாக நடைபெற்றது.


புத்தளம் இஸ்லாஹிய்யா மகளிர் கல்லூரி,  கேட்போர் கூடத்தில் இரவு 06.30 மணிமுதல் 09.30 மணிவரை நடைபெற்ற மேற்படி வைபவத்தில் பிரபல கவிஞரும் பன்னூலாசிரியருமான முல்லை முஸ்ரிபா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.


நிகழ்வின் கௌரவ அதிதிகளாக, கலாபூஷணம் ஜவாத் மரிக்கார் ஆசிரியர், முன்னாள் பிரதிக்கல்விப் பணிப்பாளர் இஸ்டம்.ஏ. சன்ஹிர், ஓய்வு நிலை அதிபர் நாகராஜா மற்றும் நிகழ்வுக்கு அனுசரணை வழங்கிய இளம் வர்த்தகர் பர்வின் ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.


கிராத் உடன் ஆரம்பித்த நிகழ்வில், CREATE நிர்வாகக் குழு உறுப்பினர் ஆசிரியர் பஸீல் அவர்கள் வரவேற்புரை வழங்க, நிறுவனத்தின் தலைவர் புத்தளம் மரிக்கார் அவர்கள், CREATE இலக்கிய வட்டம் பற்றிய அறிமுகத்தை முன்வைத்தார்.


"சிறுகதை இலக்கியம்" என்ற தலைப்பில் கலாபூஷணம் ஜவாத் மரிக்கார் அவர்களும், "மனிதநேயப் பார்வையில் பலஸ்தீனப் படுகொலைகள்" என்ற சிந்தனைப் பரப்பில் கவிஞர் "முல்லை முஸ்ரிபா" அவர்களும் தமது தேடல்களை முன்வைத்தனர்.


கொழும்பு, கண்டி, வியாங்கொட, ஹெம்மாத்தகம, வவுனியா, பலகத்துறை அடங்கலாக இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் போட்டியில் வெற்றியீட்டிய சுமார் 50 சிறுகதை எழுத்தாளர்கள் இந்நிகழ்வில் கெளரவிக்கப் பட்டத்துடன், புத்தளம் பிரதேச பாடசாலைகளில் தேசிய ரீதியில் கலை-இலக்கியத் துறையில் பிரகாசித்த மாணவர்களும் பரிசில்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர்.


பாடகர் அயாஸ் அவர்களது கீதம், ஆசிரியை சரூபியா அவர்களால் இயக்கப்பட்ட மேடை அபிநயம் போன்ற பல்சுவை நிகழ்ச்சிகளோடு, நடுவர் குழுவில் ஒருவரான ஆசிரியை முஜீபா அவர்களினால் போட்டியில் பங்கெடுத்த சிறுகதைகள் பற்றிய விமர்சன உரையும் நிகழ்த்தப்பட்டது.


அதிபர்கள், ஆசிரியர்கள், இலக்கிய ஆர்வலர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற இந்நிகழ்வில், நன்றியுரையை CREATE இலக்கிய வட்டத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சகோதரி ஆயிஷா ரிலா அவர்கள் வழங்க, நிகழ்வுகளை நிர்வாகக்குழு உறுப்பினர் சகோதரர் ஷவ்வாப் ரிபாயிஸ் தொகுத்து வழங்கினார்.





















No comments

note