Breaking News

புளிச்சாக்குளத்தில் க. பொ. த. (உ/த) எழுதிய மாணவிகளுக்கான கருத்தரங்கு

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் மாவட்டம் புளிச்சாக்குளம் பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் 2025/01/13ம் திகதி திங்கட்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் க.பொ.த உயர் தர பரீட்சை எழுதிய மாணவிகளுக்கான கருத்தரங்கு மற்றும் தர்பியா நிகழ்வு கெளரவ உப தலைவர் அஷ்ஷெய்ஹ் ரபாவுதீன் இஹ்ஸானி தலைமையில் மர்யம் மகளிர் அரபுக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலய மாணவிகளும் தாராக்குடிவில்லு முஸ்லிம் மகா வித்தியாலய மாணவிகளும் கலந்து கொண்டனர்.


இதில் சிறந்த மூத்த ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் ஆலிம்களின் பங்களிப்புடன் நான்கு தலைப்புகளில் சொற்பொழிவுகள் சிறந்த முறையில் நடை பெற்றன. 


எனவே நிகழ்வை சிறப்பாக நடாத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங்கிய எமது ஆறூர் ஆலிம்கள், ஆறூர் மஸ்ஜித் நிர்வாகிகள், இரண்டு பாடசாலை  அதிபர்கள், ஊர் மக்கள், மர்யம் கல்லூரி நிர்வாகம்  அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.


புளிச்சாக்குளம், புதுக்குடியிருப்பு 

என்.எம். ஹபீல் (கபூரி,JP)







No comments

note