Breaking News

புத்தளம் கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற வித்தியாரம்ப விழா!.

எம். எச். எம். சியாஜ்,                எம்.யூ.எம். சனூன்

புத்தளம் - தெற்கு    கோட்டத்துக்குட்பட்ட கனமூலை   முஸ்லிம் மகா வித்யாலயத்தின் வித்தியாரம்ப விழா இன்று (30) பாடசாலையின் அதிபர் பீ.எம். முஸ்னி தலைமையில் காலம் சென்ற அஷ்ஷெய்க் அரூஸ் (கபூரி) ஞாபகார்த்தமாக புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.


இன்றைய வித்தியாரம்ப விழாவில் தரம் 1 க்கு  ஐம்பது புதிய மாணவர்கள் இணைந்து கொண்டதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் - தெற்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.எம். நௌஸாத் அவர்களும், விசேட அதிதியாக ஓய்வு பெற்ற ஆரம்பப்பிரிவு முன்னாள் ஆசிரிய ஆலோசகர் எம்.கே. ஆரிப் அவர்களும் பாடசாலையின் பிரதி அதிபர், உப அதிபர் உட்பட ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் எம். இஸ்வான் உட்பட அதன் உறுப்பினர்கள் பழைய மாணவர் சங்க செயலாளர் எம்.என்.எம். நிப்ரான் உட்பட அதன் உறுப்பினர்கள், பழைய மாணவியர் சங்க உறுப்பினர்கள், புதிய மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.


இந்நிகழ்வில்  பாடசாலையின் பழைய மாணவர் சங்க உறுப்பினரும், Fasha Distributor உரிமையாளருமான கே.எம்.எம். பைஸர் மரிக்கார் பழைய மாணவர் சங்கம் சார்பில்  சிறப்புரையாற்றியதுடன் ஓய்வு பெற்ற ஆரம்பப் பிரிவு முன்னாள் ஆசிரிய ஆலோசகர் எம்.கே ஆரிப் அவர்களை பாடசாலையின் ஆரம்பப் பிரிவு  ஆசிரியர்கள்  பரிசு பொருட்கள் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.
























No comments

note