பத்து நிமிட தாமதத்தால் ஒரு நாள் கல்வியை இழக்கும் மாணவர்கள் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் அதிபரின் செயற்பாட்டால் அதிருப்த்தியில் பெற்றோர்
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் கடந்த ஐந்து மாத காலமாக பாடசாலைக்கு சமூகமளிக்கும் மாணவர்கள் ஐந்து பத்து நிமிடங்கள் தாமதமாகும் சந்தர்ப்பங்களில் பாடசாலை கதவுகளை மூடி மாணவர்கள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பும் செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு பாடசாலை ஆரம்பமாகும் காலை நேரங்களில் பாடசாலை பிரதான வாயிலில் சிலர் நின்று கொள்வதாகவும் தாமதமாக வரும் மாணவர்களின் பெற்றோர்களுடன் முரண்படுவதுடன் தகாத வார்த்தை பிரயோகங்களையும் பயன்படுத்துவதுடன் தாமதமாக வரும் தரம் இரண்டு மற்றும் தரம் மூன்று மாணவர்களை அதிபர் அடித்து பயம் முறுத்தும் செயற்பாட்டை மேற் கொண்டு வருகின்றார்.
இவ்வாறான செயற்பாடுகளை அடுத்து பெற்றோர்களால் முறைப்பாடு ஒன்றும் கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளருக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இது விடயம் குறித்து உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்டு தாமதமாகும் மாணவர்களின் கல்வி பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலை அதிபரின் செயற்பாடுகளை நிறுத்துமாறும் ஆரம்ப பிரிவு மாணவர்களை அடித்து தண்டிக்கும் செயற்பாட்டிற்கும் மற்றும் பாடசாலை ஆரம்பமாகும் நேரத்தில் பாடசாலையின் பிரதான வாயிலில் நின்று கொண்டு மாணவர்களை அழைத்து வரும் பெற்றோர்களுடன் முரண்பட்டு பிரச்சினைகளை உருவாக்கும் மேற்படி குழுவை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளதுடன் இவ்வாறு அதிபரின் தண்டனை காரணமாக பாதிக்கப்பட்ட தரம் இரண்டு மாணவி ஒருவர் வியாழக்கிழமை (30) அதிபருக்கு எதிராக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்மபாடு செய்யப்பட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மாணவன் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்மையும் குறிப்பிடத்தக்கது.
No comments